×

கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான கோயிலின் கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள்

கும்பகோணம், ஜன.29: தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயிலில் வரும் பிப்ரவரி 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் 27ம் தேதி கணபதி பூஜை, உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. 28ம் தேதியான நேற்று புவனேஸ்வரி ஹோமம் மற்றும் சண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ல அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து தினமும் ஹனுமான் மந்திர ஹோமம், லஷ்மி நரசிம்மர் மந்திர ஹோமம், தன்வந்திரி ஹோமம், குபேர மந்திர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற உள்ளது. மேலும் வரும் 2ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை ஒன்பதாம் கால யாக பூஜை நிறைவு பெற்று அன்று மதியம் 12.20 மணிக்கு ருக்மணி தாயார் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 250 வேத விற்பன்னர்கள் வேதபாராயணம் மற்றும் யாகம் செய்விக்கின்றனர். இன்று (29ம் தேதி) முதல் 6ம் தேதி வரை 24 மணி நேரமும் ஆயிரம் பாகவதர்களின் அகண்ட நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.

மேலும் இன்று (29ம்தேதி) முதல் வரும் 5ம் தேதி வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை பரனூர் மகாத்மா   கிருஷ்ணப்ரேமி மகராஜின்  பக்த விஜயம் ப்ரவசனம் நடக்கிறது. கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு தற்போது ஏராளமான பொருட் செலவில் கும்பாபிஷேகம் நடப்பதால் அப்பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் சைவ ஆதீன குருமகா சந்நிதானங்கள், வைணவ மடாதிபதிகள், ராமகிருஷ்ண மடத்தின் துறவிகள், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத் துறவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி கும்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Tags : Kumbabhishek ,Vittal Rukmini Samasthana Temple ,Govindapuram ,
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா