×

புதுக்கோட்டை அருகே ரெகுநாதபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் ஆக்ரோஷம்

கறம்பக்குடி, ஜன. 29: புதுக்கோட்டை அருகே ரகுநாதபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுகள் முட்டியதில் 48 வீரர்கள் காயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ெரகுநாதபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 716 காளைகள் அழைத்து வரப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் அனுமதிக்கப்பட்ட காளைகள், வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

ரகுநாதபுரம் மந்தையில் துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். வாடிவாசல் வழியே சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களை மிரட்டியது. இதில் காளைகளை அடக்க முயன்றதில் 48 வீரர்கள் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களும், பிடிபடாத மாட்டு உரிமையாளருக்கும் சைக்கிள், பீரோல், குக்கர், மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு விழாவையொட்டி ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Regunathapuram Jallikkat ,Pudukkottai ,
× RELATED வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு