ஓய்வு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு டிஏ வழங்க கோரி போக்குவரத்து கழக ஏஐடியூசி சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகை, ஜன.29: ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு டிஏ வழங்க கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி சார்பில் நாகை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் கோபிநாதன் தலைமை வகித்தார். மண்டல பொருளாளர் பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். 2003ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள டிஏவை உடனே வழங்க வேண்டும். வார விடுப்பு விதிகளை தன்னிச்சையாக மாற்றும் போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் தங்கபாண்டியன், மண்டல நிர்வாக குழு உறுப்பினர் வேதேஸ்வரன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் மகேந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சரபோஜி, நகர துணைத்தலைவர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நாகை நகர தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.

Related Stories: