×

குளித்தலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் துவக்கம்; முதல் நாள் மனு தாக்கலுக்கு யாரும் வராததால் அலுவலகம் வெறிச்சோடியது: தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு

குளித்தலை,ஜன.29: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டது. அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி தலைவர் பதவிக்கு பெண்களுக்கான பொது இட ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிட்டுள்ளது. குளித்தலை நகராட்சி 24 வார்டுகள் கொண்ட பகுதியாகும். இதில் ஆண் வாக்காளர்கள் 10 ஆயிரத்து 655 வாக்காளர்கள் 11857 மொத்தம் 22 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர் இதில் தலைவர் பதவிக்கு பெண்கள் பொது என இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 24 வார்டுகளில் இட ஒதுக்கீடு பற்றிய விவரம் வருமாறு :எஸ்.சி பொது 13, 20 வார்டு எஸ். சி பெண்கள், 1, 21 வார்டு. பெண்கள் பொது 5, 6, 8, 10, 11, 15, 18, 19, 24, 22 வார்டு .ஆண்கள், பெண்கள் போட்டியிடும் பொது வார்டு 2, 3, 4, 7, 9, 12, 14, 16, 17, 23 ஆகும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு என தேர்தல்ஆணையம் அறிவித்தது அதனால் நேற்று (28ம் தேதி) முதல்நாள் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. குளித்தலை நகராட்சிக்கு தேர்தல் அலுவலராக ஆணையர் சுப்புராம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் குளித்தலையில் உள்ள 24 வார்டுகளுக்கும் உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒன்று முதல் 8 வார்டு வரை குளித்தலை நகராட்சி ராதா, 9-வார்டு முதல் 16-வார்டு வரை உதவி வேளாண் அலுவலர் தனபால், 17வது வார்டுமுதல் 24வது வார்டு வரை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மல்லீஸ் வரன் ஆகியோர் உதவி தேர்தல் அலுவலராக செயல்பட்டு வேட்புமனுக்களை பெற்று வருகின்றனர்.

மூன்று பிரிவிற்கும் தனித் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது அவருடன் முன்மொழிபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்். வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள சோப்பில் முழுமையாக கையைை கழுவிவிட்டு சனிடைசர் பயன்படுத்திிவிட்டு மு ககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் முதல்்்் நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும்வரவில்லை இருந்தாலும் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது அதனைத்்தொடர்ந்து நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த கட்சிபேனர்கள் சுவரொட்டிகள் பேனர்கள் அகற்றப்பட்டது. நகர முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் கொடிகள் கம்பத்துடன் அகற்றப்பட்டது ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு களுக்கு துணி வைத்து கட்டப்பட்டிருந்தது.

Tags : Kulithalai ,Election ,Election Flying Corps ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...