நரிக்குடி அருகே நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: அரசுக்கு விவசாயிகள் நன்றி

காரியாபட்டி, ஜன. 29: நரிக்குடி அருகே பனைக்குடியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், கிளைச்செயலாளர் சக்திவேல் ஆகியோர் ஏற்பாட்டில் நரிக்குடி ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில், நரிக்குடி முன்னாள் சேர்மன் ஜெயராஜா, பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சேதுபதி ஆகியோர் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது.

பனைக்குடி, இசலி சாலை இலுப்பைகுளம் உட்பட 20க்கு மேற்பட்ட கிராம விவசாயிகளின் 10 ஆண்டு கால கோரிக்கையான அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை கிராமப் பகுதிகளில் திறந்து வைத்ததற்கு தமிழக அரசுக்கும், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாரிமுத்து, வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், மாவட்ட பிரதிநிதி ஆதிமூலம், ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு வழக்கறிஞர் தங்கபாண்டியன் உட்பட நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: