×

ஆலங்குளத்தில் மாணவர்களுக்கு சிலம்ப போட்டி

சிவகாசி, ஜன. 29: வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆலங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் சங்கரமூர்த்திபட்டி, சுண்டங்குளம், ஆலங்குளம், பெரியார்காலனி, அண்ணாநகர் பகுதி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிலம்பம் போட்டியில் ஒற்றை கம்பம் சுற்றும் போட்டி நடைபெற்றது.

போட்டியில் வெற்றி ெபற்றவர்களுக்கு ஆலங்குளம் ஊராட்சிமன்ற தலைவர் காத்தம்மாள் பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை சிலம்பம் பயிற்சி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.

Tags : Alangulam ,
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி