×

ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு?

ஆண்டிபட்டி, ஜன. 29: ஆண்டிபட்டி அருகே, வரதராஜபுரம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நேற்று வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதாக ராஜதானி போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர். அப்போது ராம்குமார் என்ற மாற்றுத்திறனாளி இளைஞரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசாரை கண்டித்து ஜல்லிக்கட்டு பயிற்சிக்கு வந்திருந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி டிஎஸ்பி தங்ககிருஷ்ணன் நேரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கூடாது என்றார்.

இதற்கு இளைஞர்கள் நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தவில்லை. காளைகளுக்கு பயிற்சி அளித்தோம் என்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து டிஎஸ்பி தங்ககிருஷ்ணனிடம் கூறுகையில், ‘ஜல்லிக்கட்டு போட்டி நடத்தவில்லை. காளைகளுக்கு பயிற்சிதான் அளித்துள்ளனர். அனைத்து மாடுகளும் சிறிய மாடுகள். ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் 20 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள். அதனால், அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளோம். இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை’ என்றார்.

Tags : Jallikkattu ,Andipatti ,
× RELATED பிரிந்து சென்றவரை சேர்த்து...