ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன. 29: ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை வழங்கக்கோரி ஏஐடியுசி அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மண்டல துணை தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் சண்முகம், மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை நிலுவை தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும். 14 வது ஊதிய ஒப்பந்தத்தை சங்கங்களை அழைத்து பேசி முடித்து ஊதியம் வழங்க வேண்டும். 2003க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: