×

விவசாயம், குடிதண்ணீருக்காக அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

பட்டிவீரன்பட்டி: விவசாயம், குடிதண்ணீருக்காக பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து 80 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அய்யம்பாளையம் மருதாநதி அணைக்கு தாண்டிக்குடி, பண்ணைகாடு, பாச்சலு£ர்,கடுகுதடி போன்ற மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் நீராதாரமாகும். நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் நீர் வரத்து குறைந்துவிட்டது.

இருந்த போதிலும் மருதாநதி அணையின் மொத்த உயரமான 72 அடியில் தற்போது 70 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.மேலும் அணையில் 162 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. நேற்று அணையிலிருந்து விவசாயம் மற்றும் குடிதண்ணீருக்காக 80 கன அடி தண்ணீர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டது. தொடச்சியாக இந்த அணை கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 5வது முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அணை தண்ணீர் மூலமாக நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாக்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பயன்பெறுகின்றன. இந்நிலங்களில் தற்போது முதல் போக சாகுபடிக்காக நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Ayyampalayam Marudhanadi Dam ,
× RELATED அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு