(தி.மலை) தனியார் கம்பெனி ஊழியர் தற்கொலை

வந்தவாசி, ஜன.28: வந்தவாசி அடுத்த பென்னாட்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி லலிதா. இவர்கள் சென்னையில் உள்ள திருமண மண்டபத்தில் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இவர்களது மகன்கள் வசந்தகுமார்(23), ஐயப்பன். இவர்கள் வண்டலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் பெருங்களத்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

இந்நிலையில், ஐயப்பன் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 22ம் தேதி பென்னாட்டகரம் கிராமத்தில் உள்ள பாட்டி மாரியயம்மாள் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்ட ஐயப்பன், வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஐயப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து லலிதா நேற்று முன்தினம் தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: