×

நாகையில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு கூட்டம்

நாகை,ஜன.28: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சைபர் க்ரைம் விழிப்புணர்வு கூட்டம் நாகை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். நாகை வட்டச் செயலாளர் அற்புதராஜ்ரூஸ்வெல்ட் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் அன்பழகன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாநிலச் செயலாளர் டேனியல்ஜெயசிங் தொடக்க உரையாற்றினார். சைபர் க்ரைம் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் திருக்குமரன், காவலர் முருகதாஸ் ஆகியோர் சைபர் க்ரைம் குற்றம் குறித்தும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினர். இதில் ஏடிஎம் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றின் எண்களை அறிமுகம் இல்லாதவர்களிடம் தெரிவிக்க கூடாது.

வங்கியில் இருந்து வரும் ரகசிய எண் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் எண் ஆகியவற்றை மற்றவர்களுக்கு தெரிவிக்க கூடாது. செல்போன் மற்றும் இன்டர் நெட், சமூக வலைதலங்களில் சுய விவரங்களை பதிவு செய்ய கூடாது. சலுகை விலையில் பொருட்கள் தருவதாக கூறுவோர்களிடம் கவனமாக கையாள வேண்டும். சைபர் க்ரைம் குற்றங்களுக்கு இலவச தொலைபேசி எண் 155260 அல்லது http://cybercrime.gov.in. என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தணிக்கையாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Tags : Cyber ,Awareness ,Nagaland ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி