தி.பூண்டி நகராட்சி தேர்தல் மனு தாக்கல் செய்ய அறைகள் ஒதுக்கீடு

திருத்துறைப்பூண்டி, ஜன.28: திருத்துறைப்பூண்டி நகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறை எண்-1ல் வார்டு எண் 1 முதல் 6வது வார்டு வரையிலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறை எண் 2ல் வார்டு எண் 7 முதல் 12வது வார்டு வரையிலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறை எண் 3ல் வார்டு எண் 13 முதல் 18 வரையிலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அறை எண் 4ல் வார்டு எண் 19 முதல் 24வது வார்டு வரையில் உள்ளவர்கள் போட்டியிட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மனுதாக்கல் செய்யலாம் என்று நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: