×

வி.கே.புரம் நகராட்சி தலைவர் பதவி பொது பிரிவுக்கு ஒதுக்கீடு

வி.கே.புரம் ஜன. 28:  வி.கே.புரம் நகராட்சித் தலைவர் பதவி பொதுபிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வி.கே.புரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் 1, 7, 9, 12, 16, 18, 19, 20, 21 ஆகிய வார்டுகள் பொது பிரிவிற்கும், 2, 3, 5, 6, 8, 11, 13, 14, 15, 17 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுவுக்கும், 4வது வார்டு எஸ்சி பொதுவுக்கும், 10வது வார்டு எஸ்சி பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.  மொத்தமுள்ள 21 வார்டுகளில் 9 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும், 10 வார்டுகள்  பெண்களுக்கும், ஒரு வார்டு எஸ்சி பெண்ணுக்கும் மற்றொரு வார்டு எஸ்சி  பொதுவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தலைவர் பதவியும் பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

விகேபுரம் நகராட்சி கடந்த 2004 ஏப்ரல் 8ம் தேதி பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக மாறியது. அப்போது பேரூராட்சியின் தலைவராக இருந்த சுப்புலட்சுமி நகராட்சி தலைவராக அறிவிக்கப்பட்டார். இவர் 2001ம் ஆண்டு திமுக சார்பில் நேர்முகத் தேர்தலில் போட்டியிட்டு பேரூராட்சி தலைவராக  வெற்றி பெற்றார். பின்னர் ஆளுங்கட்சியான அதிமுகவிற்கு தாவினார்.  2006-2011 வரை திமுகவைச் சேர்ந்த மாரியப்பன் நகராட்சித் தலைவராக மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றார். 2011-2016 வரை அதிமுகவைச் சேர்ந்த மனோன்மணி நேரடி தேர்தலில் வெற்றி பெற்று நகராட்சித் தலைவரானார். அதன்பின் 6 வருடங்களாக தேர்தல் நடைபெறவில்லை. தற்பொழுது 2022 பிப்ரவரி 19ம்தேதி நடைபெற உள்ள தேர்தலில் தலைவர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுகவும், திமுகவும் தங்கள் வேட்பாளரை நிறுத்துவதற்கு தீவிர ஏற்பாடு செய்து வருகின்றன.

Tags : VK Puram ,Municipal ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ