செம்பரம்பாக்கம் ஏரியில் குளித்த கல்லூரி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த வடக்கு மலையம்பாக்கம், குமரன் நகரை சேர்ந்தவர் நரேஷ்குமார் (18). போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் முதலாண்டு படித்துவந்தார். நேற்று முன்தினம் நரேஷ்குமார்,  தனது நண்பர் அதே பகுதியை சேர்ந்த முத்துபிரபு என்பவருடன், செம்பரம்பாக்கம் ஏரிக்கு பைக்கில் சென்றார். அங்கு, 5ம் கண் மதகு அருகே இருவரும் தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற நரேஷ்குமார், தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த நண்பர், அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. தகவலறிந்து பூந்தமல்லிதீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் மூழ்கிய நரேஷ்குமாரை, நேற்று காலை சடலமாக மீட்டனர். புகாரின்படி,  குன்றத்தூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: