திருமயம் அருகே ஊரணியில் மூழ்கி முதியவர் சாவு

திருமயம். ஜன.26: திருமயம் அருகே ஊரணிக்கு குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கோனாபட்டு இரட்டைப் பாலம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (57). இவர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டு ஊரணிக்கு குளிக்கச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சுப்பிரமணியன் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஊரணிக்கு தேடிச் சென்றனர். அங்கு சுப்பிரமணியன் உயிரிழந்த நிலையில் நீரில் மிதந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சுப்பிரமணியன் மனைவி மகேஸ்வரி திருமயம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுப்பிரமணியன் இறந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுப்பிரமணியன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

Related Stories: