பராமரிப்பு பணி காரணமாக மாதவரம் மயானபூமி மூடல்

சென்னை: மந்தைவெளி மயானபூமியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், நாளை மறுநாள் முதல் மூடப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: மாதவரம் மண்டலம், வார்டு 27க்கு உட்பட்ட மந்தைவெளி (தெலுங்கு காலனி) எரிவாயு மயான பூமியின் தகனமேடையை, எல்பிஜி எரிவாயு தகன மேடையாக மாற்றும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை மறுநாள் (28ம் தேதி) முதல் பிப்.6ம் தேதி வரை மயானபூமி  இயங்காது. மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-23, புழல்-ஜி.என்.டி. சாலை மயானபூமி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வார்டு-34, சித்தரம் நகர் இந்து மயானபூமி மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-68, பல்லவன் சாலை-தாங்கல் இந்து மயானபூமி ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: