பரமத்திவேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் அருகே பூட்டிய வீட்டில் பூட்டை உடைத்து 15 ஆயிரம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பில்லூர் வடக்கு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி (61). ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அலுவலரான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கரூரில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். நேற்று கரூரிலிருந்து பில்லூருக்கு திரும்பி வந்த துரைசாமி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் சமையல் அறை டப்பாக்களில் வைக்கப்பட்டிருந்த ₹15 ஆயிரம் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி திடுக்கிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories: