மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து திமுகவினர் துண்டு பிரசுரம் விநியோகம்

அரூர்: தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு கடந்த வாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அதில் ₹4600 கோடியில் ஒகேனக்கல் குடிநீர் விரிவாக்கத் திட்டம், தர்மபுரியில் ஆவின் பால் பதனிடும் நிலையம், புதிய சிப்காட் பூங்கா, ஒட்டனூர் -கோட்டையூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளிட்ட பணிகள் குறித்து, மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், அரூரில் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் பேருந்து நிலையம், கடைவீதி, ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னால் அமைச்சர் பழனியப்பன், நகர செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் வேடம்மாள், சந்திரமோகன், சுந்தரராசு, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் சூர்யா தனபால், தேசிங்குராஜன், பொறுப்பாளர்கள் கிருஷ்ணகுமார், சென்னகிருஷ்ணன், டாக்டர் சுரேஷ்குமார், விண்ணரசு, பெருமாள், கோட்டீஸ்வரன், தனபால், மாதேஷ்வரன், தென்னரசு, திருவேங்கடம், சேகர், கிருஷ்ணமூர்த்தி, தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: