×

வாறுகால் அமைக்க பூமிபூஜை

ராஜபாளையம்: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் புத்தூர் கிராமம் மெயின் தெருவில் வாறுகால் அமைக்கும் பணி ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் துவங்கியது. ராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ் துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சேர்மனிடம் அங்கு கூடி இருந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், நோய்த்தொற்று பரவாமல் இருக்கவும் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்காமல் இருக்கவும் புதிதாக வாறுகால் மற்றும் சாலை வசதிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், சேதமடைந்த வாறுகால் மற்றும் சாலைகள் ஒவ்வொன்றாக சரி செய்து தரப்படும் என்று கூறினார். உடன் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் கவுன்சிலர் நவமணி, ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சமுத்திரம் மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Bhoomipooja ,
× RELATED விவசாயிகளின் எதிர்ப்பை மீறி பல்லாரியில் விமான நிலைய பணிக்கு பூமிபூஜை