திமுக விருப்ப மனு விநியோகம்

சிவகாசி:  சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் 48 வார்டுகள் வரையறை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சிவகாசி நகர திமுக அலுவலகத்தில் ேநற்று மாநகராட்சி ேதர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கப்பட்டது. பொது வார்டுக்கு ரூ.10 ஆயிரம், பெண்கள் வார்டுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி கட்சியினர் விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர். திமுக நகர் பொறுப்பாளர் காளிராஜன் விருப்ப மனுக்களை வழங்கினார். சிவகாசி மாநகர ேதர்தலில் போட்டியிட மாவட்ட அவைதலைவர் தங்கராஜ், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் வெயில்ராஜ், நகர பொறுப்பாளர் காளிராஜன், மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் இன்பம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரன் உட்பட திமுக கட்சியினர் ஏராளமானோர் விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர்.

Related Stories: