×

அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது 536 பேருக்கு மீண்டும் முதியோர் உதவித்தொகை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்

சின்னாளபட்டி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள 24 கிராம ஊராட்சிகளை சேர்ந்த முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கன்னிவாடி பேரூராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் காசிசெல்வி, ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் தண்டபாணி, கன்னிவாடி பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மேற்கு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மீனாதேவி வரவேற்றார். நிகழ்ச்சியில் 536 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், 60 பேருக்கு இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையையும் அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘‘தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் கிராமங்களில் உள்ள முதியோர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை உங்கள் இல்லம் தேடி வரும் என கூறினேன். அதுபோல இன்று நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர்களுக்கும், வறுமையில் வாடும் முதியோர்களுக்கும் முதல் தவணையாக 536 முதியோர்களுக்கு இன்று உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய துணை தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், ஆத்தூர் நடராஜன், ஊராட்சிமன்ற தலைவர்கள் டி.புதுப்பட்டி அருணாச்சலம், கோனூர் தங்கபாண்டியன், குட்டத்துப்பட்டி வேல்கனி ஹரிசந்திரன், கொத்தப்புள்ளி சுந்தரி அன்பரசு, கே.புதுக்கோட்டை காமாட்சியப்பன், ஊராட்சிமன்ற துணைத்தலைவர்கள் கொத்தப்புள்ளி ரெங்கசாமி, கசவனம்பட்டி செல்வம், குட்டத்துப்பட்டி விசுவாசம், ஒன்றியகுழு உறுப்பினர்கள் சுமதி கணேசன், காளீஸ்வரி மலைச்சாமி, நாகலெட்சுமி ரமேஷ், கோனூர் திருப்பதி மற்றும் திமுக நிர்வாகி புதுப்பட்டி உதயக்குமார், கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் யுவராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Minister ,I. Periyasamy ,
× RELATED ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை