பழநியில் மாஸ் ஒருங்கிணைந்த மருத்துவமனை கட்டிட திறப்பு விழா

பழநி: பழநியில் நடந்த மாஸ் ஒருங்கிணைந்த மருத்துவமனையின் திறப்பு விழா நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.   பழநி அடிவாரம், தெற்கு கிரிவீதியில் தவத்திரு சாது நந்தி அடிகளார் ஆசிரம வளாகத்தில் தவத்திரு சாது நந்தி அடிகளார் மாஸ் ஒருங்கிணைந்த மருத்துவமனையின் கட்டிட திறப்பு விழா நடந்தது. பழநி ஆதீனம் சாது சண்முக அடிகளார் தலைமை வகித்தார். டாக்டர்கள் சங்கீதா ராமநாதன், அரசு ஆகியோர் வரவேற்றனர். பேரூர் ஆதீனம் சுந்தரலிங்க மருதாசல அடிகளார்,  திரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார்,  தேன்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகளார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கந்தவிலாஸ் செல்வக்குமார், முன்னாள் எம்எல்ஏ வேணுகோபாலு, கே.வி.மருத்துவமனை நிர்வாகி டாக்டர் சந்திரலேகா மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இம்மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், இயற்கை மருத்துவம், யோகா மற்றும் ஆங்கில மருத்துவ முறைகளில் தனித்தனி பிரிவுகளாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: