தமிழக முதல்வருக்கு பாராட்டு

பழநி: தைப்பூச திருவிழாவை சிறப்புடன் நடத்திய தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து அடிவாரம் வர்த்தகர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.பழநியில் அடிவாரம் வர்த்தகர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் கந்தவிலாஸ் செல்வக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் பழநி தைப்பூச திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த சூழ்நிலையில் பாதுகாப்பு பணிக்கு போதிய போலீசாரை பணியமர்த்தி சவுகரியமாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ததற்காக தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், எஸ்பி, பழநி கோயில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டோருக்கு பாராட்டும், வாழ்த்துக்களுக்கும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஆலோசகர் மதனம், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் வேல்முருகன், பொறுப்பாளர்கள் சந்திரசேகரன், ஆனந்தகுமார், முருகேசன் கலந்து கொண்டனர்.

Related Stories: