நடப்பு சம்பா பருவத்தில் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருச்சி, ஜன.25: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருச்சி மண்டலத்தில், கேஎம்எஸ் 2021-22ம் நடப்பு சம்பா பருவத்தில் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்ட விவசாயப் பெருமக்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் விற்பனை செய்திட ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc-edpc.in இணையதளத்தில் விவசாயிகளின் பெயர், ஆதார் எண், புல எண், வங்கி கணக்கு எண் மற்றும் கீழ்காணும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் குறியீடு (டிபிசி கோட்) உள்ளிட்ட விவரங்களை இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ இணையத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட அசூர் (P15090661), குண்டூர் (P15090431), கீழக்குறிச்சி (P15090451), கூத்தைப்பார் (P15090601), குவளக்குடி (P15090531), பத்தாளப்பேட்டை (P15090631), சூரியூர் (P15090761), தேனேரிப்பட்டி (P15090851), துவாக்குடி (P15090841), வேங்கூர் (P15090551) ஆகிய இடங்களிலும், ரங்கம் வட்டத்திற்குட்பட்ட இனாம்புலியூர் (P15078931), குழுமணி (P15070191), மணிகண்டம் (P15078961), மேக்குடி (P15070721), நவலூர் குட்டப்பட்டு (P15070911), ஓலையூர் (P15073011), பெட்டவாய்த்தலை (P15070811), பூங்குடி (P15078921), புங்கனூர் (P15078951), சேதுராப்பட்டி (P15070821), தாயனூர் (P15070271), திருவளர்சோலை (P15070041) ஆகிய இடங்களிலும், முசிறி வட்டத்திற்குட்பட்ட அய்யம்பாளையம் (P15045751), குணசீலம் (P15040751), கல்லூர் (P15045761), முசிறி-கிழக்கு (P15045521) ஆகிய இடங்களிலும், மணப்பாறை வட்டத்திற்குட்பட்ட மரவனூர்சேர்பட்டிதெற்கு (P15034381), நல்லாம்பிள்ளை (P15030081), சமுத்திரம் (P15030151), வையம்பட்டி (P15030451) ஆகிய இடங்களிலும், மருங்காபுரி வட்டத்திற்குட்பட்ட மருங்காபுரி (P15100761), வளநாடு கைகாட்டி (P15107231) ஆகிய இடங்களிலும், மண்ணச்சநல்லூர் வட்டத்திற்குட்பட்ட மருதூர் (P15068541), தொட்டியம் வட்டத்திற்குட்பட்ட ராமசமுத்திரம் (P15080091), தொட்டியம் (P15080201) ஆகிய இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லினை விற்பனை செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று திருச்சி கலெக்டர் சிவராசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: