இணையத்தில் முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒரேநாளில் 40 குழந்தைகள் சேர்ப்பு

திருச்சி, ஜன.25: தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அஞ்சல்துறையில் குழந்தைகள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 40 குழந்தைகளை சேர்த்து அவர்களுக்கு முதல்தவணையை அஞ்சல்துறையே செலுத்தி கணக்கு துவங்கியது.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெரிய மிளகுபாறை குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், அஞ்சல் துறையில் குழந்தைகள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசிம், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சாமிநாதன், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா, மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் அஞ்சல் துறை சார்பில், திட்டம்-1 உறையூர் வட்டாரத்தில் 8 குழந்தைகள் மையத்தை சேர்ந்த 40 பெண் குழந்தை பயனாளிகளுக்கு முதல் கட்டமாக இலவசமாக ரூ.250 பணம் கட்டி கணக்கு துவங்கினர். தொடர்ந்து அவர்கள் இந்த கணக்கில் மாதம்தோறும் தங்களால் இயன்ற தொகையை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கட்டிக்கொள்ளலாம். இது பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பேருதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: