×

தஞ்சையில் சிறுமி மாயம்

தஞ்சை,ஜன.25: தஞ்சை கோரிக்குளத்தை சேர்ந்த 15 வயது சிறுமி. இவர் சரியாக படிக்கவில்லை என கூறி பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் சிறுமி தனது தோழியை பார்க்க வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...