கடலூரில் உலக முதியோர் தினவிழா

கடலூர், ஜன. 25: உலகம் முழுவதும் அக்டோபர் 1ம் நாளினை முதியோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதியோர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கடலூர் சொரக்கல்பட்டு பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்சித்சிங் தலைமையில் கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ முன்னிலையில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தினவிழா நடைபெற்றது. முதியோர் தினவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகளையும், மேலும் அவ்வில்லத்தில் உள்ள முதியோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங், ஐயப்பன் எம்எல்ஏ முதியோர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, ஹெல்ப் ஏஜ் இந்தியா இயக்குநர் டாக்டர் சத்தியபாபு, வழக்கறிஞர் வனராஜ், உளவியல் ஆலோசகர் மனோகரன், (சமூகநல அலுவலகம்) சுமதி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முதியோர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: