பறவைகள் ஆர்வலர் குழு கலந்தாய்வு கூட்டம்

கடலூர், ஜன. 25: கடலூரில் மாவட்ட வனத்துறை சார்பில் பறவைகள் ஆர்வலர் குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் செல்வம் தலைமை தாங்கி பறவைகள் மற்றும் அதன் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். டாக்டர் இளந்திரையன், கடலூர் பகுதி வன அலுவலர் அப்துல் ஹமீத், வனவர் குணசேகரன் உள்ளிட்டவர்கள் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் பறவைகள் ஆர்வலர் குழுவை சேர்ந்த மாணவர்கள், கடலூர் சிறகுகள் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கடலூர் கடலோர பகுதி மற்றும் அதை சார்ந்த இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்துவது. இதில் 25 பறவைகள் ஆர்வலர்கள் கலந்துகொண்டு மாவட்ட வனத்துறை  அறிவுறுத்தலின்பேரில் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

Related Stories: