(தி.மலை) 51 பயனாளிகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் பணி ஆணை எம்எல்ஏ வழங்கினார் செங்கம் அடுத்த பக்கரிபாளையம் கிராமத்தில்

செங்கம், ஜன.25. செங்கம் அடுத்த பக்கரிபாளையம் கிராம ஊராட்சியில் வீடு வழங்கும் திட்டத்தில் 51 பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணையை எம்எல்ஏ மு.பெ.கிரி வழங்கினார். செங்கம் அடுத்த பக்கரிபாளையம் கிராம ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா முனியன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் சர்பு நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சிகள் ஆணையாளர் ரபியூல்லா வரவேற்றார். நிகழ்ச்சியில் பக்கரிபாளையம் கிராம 51 பயனாளிகளுக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணையினை எம்எல்ஏ மு.பெ.கிரி வழங்கி பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் சென்னம்மாள் முருகன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.

Related Stories: