தஞ்சை மருத்துவக்கல்லூரி, பூண்டி, சாலியமங்கலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

தஞ்சை, ஜன.24: தஞ்சை மாவட்டம் பூண்டி, சாலியமங்கலம் பகுதிகளில் நாளை (25ம் தேதி) மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெகுநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளமர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுளிகுடிகாடு, நார்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லுரி சாலையில் அமைந்துள்ள 110 கி.வோ தொகுப்பு துணைமின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை (25ம் தேதி) நடைபெற உள்ளது . அன்றைய தினம் காலை மணி 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.மருத்துவக்கல்லுரிபகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல்காலனி , புதியபேருந்துநிலையம், புதியவீட்டுவசதி வாரியகுடியிருப்பு, ஆர்.ஆர்.நகர், காவேரிநகர், எலிசாநகர், நூற்பாலை, மாதாகோட்டை , சோழன்நகர், தமிழ்பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மனோஜிபட்டி ரெட்டிபாளையம் ரோடு சிங்கப்பெருமாள்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

Related Stories: