×

வைகுண்டத்தில் நகர திமுக கூட்டம்

வைகுண்டம், ஜன. 24: வைகுண்டத்தில் நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. வைகுண்டம் வட்டார விவசாய ஆலோசனை குழு அட்மா திட்டம் மற்றும் உழவர் நலத்துறை சேர்மன் பெருமாள் தலைமை வகித்தார். நகர அவைத்தலைவர் காசினிவேந்தன்,  நகர பொருளாளர் பொன் பாண்டியன், நகர துணைச்செயலாளர் ஜெயபால், நகர கூடுதல் துணைச் செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் வைகுண்டம் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் திமுக  கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற அயராது உழைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்டப் பிரதிநிதி ராமலிங்கம், ஒன்றிய பொருளாளர் செல்லையா பாண்டியன, நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கை இசக்கியப்பன், மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வீரபுத்திரன் (எ) ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர் மாசான செல்வம், மாணவர் அணி ஒன்றிய அமைப்பாளர் மாரி, இளைஞர் அணி நகர அமைப்பாளர் இசக்கி, நகர பிரதிநிதி முத்துப்பாண்டி, கண்ணா மெஸ் கைலாசம், பிச்சை ஆண்டி (எ) பிரபு, குமார், வார்டு செயலாளர்கள் ராமசாமி, சுப்பிரமணியன், செல்லையா பாண்டியன், நகர பொருளாளர் பொன் பாண்டி, ஆறுமுகநயினார், காசினி வேந்தன், ராகவன், குமார், தர்மர், சுப்பிரமணியன், ஆண்டியா, கே.டி.சி. அண்ணாமலை, பழனி, பட்டானி சேகர், மாரிமுத்து, சிவா, சாலமோன் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், சார்பு அணியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : DMK ,Auvaikundam ,
× RELATED மாநகர் மாவட்ட திமுக சார்பில் மக்களின்...