நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தென்காசி மாவட்ட காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சுரண்டை, ஜன.24: தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான பழனி நாடார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி காங்கிரஸ் கட்சியின் தென்காசி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரபாகர், ஜேசு ஜெகன் சுரண்டை நகராட்சி பொறுப்பாளராகவும், முரளிராஜா, உதய கிருஷ்ணன் தென்காசி நகராட்சி பொறுப்பாளராகவும், விஜய், கதிரவன் செங்கோட்டை நகராட்சி பொறுப்பாளராகவும், சுந்தரையா, எஸ்.ஆர்.எஸ்.ரமேஷ் கடையநல்லூர் நகராட்சி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சங்கை கணேசன் புளியங்குடி நகராட்சி பொறுப்பாளராகவும், தலைவன்கோட்டை மணிகண்டன் சங்கரன்கோவில் நகராட்சி பொறுப்பாளராகவும், பேரூராட்சி பகுதிகளில் கிளாங்காடு மணி, குற்றாலம் பெருமாள் ஆகியோர் தென்காசி வட்டார பொறுப்பாளராகவும், சித்திரை நயினார் குற்றாலம் பொறுப்பாளராகவும், ஆயிரப்பேரி லட்சுமணன் இலஞ்சி பொறுப்பாளராகவும், மாரிகுமார் மேலகரம் பொறுப்பாளராகவும், பாபநாசம் மற்றும் தங்கராஜ் ஆகியோர் சுந்தரபாண்டியபுரம் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டநாதன் மற்றும் சிவராமகிருஷ்ணன் செங்கோட்டை வட்டார பொறுப்பாளராகவும், விஜயன் எஸ்.புதூர் பொறுப்பாளராகவும், ரமேஷ் ஆய்க்குடி பொறுப்பாளராகவும், சேர்மக்கனி சாம்பவர்வடகரை பொறுப்பாளராகவும், உசேன் வடகரை பொறுப்பாளராகவும், வேல்ச்சாமி அச்சன்புதூர் பொறுப்பாளராகவும், நாகராஜன் வாசுதேவநல்லூர் வட்டார பொறுப்பாளராகவும், திருஞானம் வாசுதேவநல்லூர், சிவகிரி பகுதி பொறுப்பாளராகவும், சுந்தர்ராஜ் குருவிகுளம் வட்டாரம் திருவேங்கடம்  பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் அந்தந்த பகுதியைச் சேர்ந்த நகர தலைவர்கள், பேரூராட்சி, வட்டாரத் தலைவர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: