கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

கடலூர், ஜன. 24:    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் (கருடஸ்தலம்) கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் புனரமைக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர்  உ.வே தேகலீச ராமானுஜச்சாரிய சுவாமிகள், சோளிங்கர்  உ.வே கோயில் கந்தாடை சண்ட மாருதம் குமார தொட்டையாச்சாரியார் சுவாமிகள், மன்னார்குடி  உ.வே செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 20ம் தேதி பூஜைகள் தொடங்கி தொடர்ந்து யாகசாலை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை விஸ்வரூபம், கோ கஜபூஜை மற்றும் 5ம் கால யாகசாலை பூஜை, சாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் அடங்கிய குடங்கள் மங்கள வாத்தியத்துடன் புறப்பாடு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

முழு ஊரடங்கை முன்னிட்டு பக்தர்கள் கோயில் வளாகத்திற்குள் பெருந்திரளாக அனுமதிக்கப்படவில்லை. அனைத்து நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ரமேஷ்பாபு, தக்கர் சுபத்ரா, பிரபல சந்திரராஜ், பெருநிலக்கிழார் பத்திரிநாத், ஓய்வுபெற்ற மின்சாரத்துறை அதிகாரி அனந்தாழ்வார், எலைட் கன்ஸ்ட்ரக்ஷன் பொறியாளர் சந்தானகிருஷ்ணன், கேகே ஸ்டோர் கிஷோர், கோயில் தலைமை எழுத்தர் ஆழ்வார் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர். விழாவில் திமுக நகர செயலாளர் ராஜா, டாக்டர் பிரவீன் ஐயப்பன், லீமா ஐயப்பன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், மாணவரணி பாலாஜி, பிஎஸ்என்எல் குழு உறுப்பினர் கோவிந்தன், ஐ கார்னர் அரிமா ராஜா, சன் பிரைட் பிரகாஷ், வழக்கறிஞர் வினோத், ரோட்டரி ஆனந்தராஜா, ஓட்டல் நிலா தங்கராசு, கோஸ்டல் ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் கருணாகரன், ஊராட்சி துணைத்தலைவர் சாந்தி பழனிவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: