×

(தி.மலை) ஸ்ரீவெங்கடேசபெருமாள், ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் போளூர் அருகே

போளூர், ஜன.24: போளூர் அருகே வெங்கடேசபெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயிகளில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. போளூர் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதிதாக வெங்கடேசபெருமாள், ஆஞ்சநேயர் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் பந்தகால் நடப்பட்டு, மங்கலம் இசை முழங்க காலை 7.00 மணிக்கு விஷ்வக்சேனா, மகா கணபதி பிரார்த்தனை, வேதகாம ஆச்சாரி யவர்ணம், அனுக்ஞை, கோபூஜை, லஷ்மி, சுதர்சன கணபதி, நவக்கிரக ேஹாமம், பூர்ணாஹூதி, இரவு மருந்து சாற்றுதல் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று கோ பூஜை, சங்கல்பம், 2ம் கால யாகசாலை பூஜை ஆரம்பம், மகா கும்ப புறப்பாடு, மகா சம்ப்ரோஷணம் அலங்காரம், தீபாரதனை, வேதபிரபந்தம், தமிழ்மறை சாற்று முறை, தீர்த்த பிரசாதம் விநியோகம் நடைபெற்றது. மங்கல இசை முழங்க பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் எம்எல்ஏக்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (போளூர்), சேவூர் எஸ்.ராமசந்திரன் (ஆரணி) உட்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : T.Malai ,Srivenkatesaperumal ,Anjaneyar Temple ,Darshan Polur ,
× RELATED புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலுக்குள்...