(தி.மலை) வீடுகளிலேயே கொண்டாடிய சிறுவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்

கண்ணமங்கலம், ஜன.24: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தை சிறுவர்கள் வீடுகளிலேயே கொண்டாடினர். இந்தியாவிலேயே அதிக ராணுவ வீரர்கள் வசிக்கும் கிராமமாக கம்மவான்பேட்டை இருக்கிறது. வீடுகள்தோறும் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள அனைவரும் மூன்று தலைமுறைகளாக ராணுவத்தில் பணியாற்றி வருவது இக்கிராமத்தின் சிறப்பு. இக்கிராமத்து தாய்மார்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே தாய்பாலுடன் தேசபக்தியையும் சொல்லி வளர்க்கிறார்கள். இந்நிலையில் இங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் வருடந்தோறும் நேதாஜி பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நேதாஜி பிறந்த நாளான நேற்று ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால், கிராமத்து சிறுவர் மற்றும் சிறுமிகள் தங்கள் வீடுகளிலேயே நேதாஜி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் எல்.ஏழுமலை பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Related Stories: