திருவில்லிபுத்தூரில் விசாரணை கைதிகள் 5 பேருக்கு கொரோனா

திருவில்லிபுத்தூர், ஜன. 22: திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார காவல் நிலையங்களைச் சேர்ந்த ஐந்து பேர் சிறைச்சாலையில் அடைப்பதற்கு முன்பாக கோவிட் தொற்று உள்பட பல்வேறு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து திருவில்லிபுத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறப்பு வார்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: