திமுக சார்பில் கூடலூர், நெல்லியாளம் நகராட்சியில் போட்டியிடுபவர்களிடம் நேர்காணல்

ஊட்டி,ஜன.22:திமுக., சார்பில் கூடலூர், நெல்லியாளம் நகராட்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் திமுக., சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களிடம் நேர்காணல் 19ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள் மற்றும் தேவர்சோலை, ஓவேலி, நடுவட்டம் ஆகிய பேரூராட்சிகளில் விருப்ப மனு வழங்கியவர்களிடம் மாவட்ட அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நேர்காணல் நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிட விருப்பமனு அளித்த பலரும் இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நேர்காணலின் போது, மாவட்ட அவை தலைவர் பில்லன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, பாண்டியராஜ், இளங்கோ, எக்ஸ்போ செந்தில், திராவிடமணி, ராஜூ, நகர செயலாளர்கள் ராஜேந்திரன், காசிலிங்கம், ரராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, தொரை, சிவானந்தராஜா, சுஜேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, வெங்கடேஷ், சீனி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், பேரூர் செயலாளர்கள் போஜன், மாதேவ், உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: