நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அதிமுக தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

வத்தலக்குண்டு, ஜன. 22: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டம் திண்டுக்கல் கோட்டாட்சியர் காசிசெல்வி தலைமையில் நடந்தது. நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுகவைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் லலிதா மணிகண்டன், அதிமுக தலைவர் ரெஜினா நாயகம் மற்றும் துணைத்தலைவர் யாகப்பன் ஆகியோர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்.அதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது. பின்னர் முதற்கட்டமாக தலைவர் வாக்குகள் எண்ணப்பட்டது. அப்போது திமுக, அதிமுகவினர் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.  அதை தொடர்ந்து திண்டுக்கல் கோட்டாட்சியர்காசி செல்வி வாக்கு எண்ணிக்கையை பாதியில் நிறுத்தி விட்டு கிளம்பி சென்றார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நிலக்கோட்டை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் போலீசார் அனைவரையும் அமைதிப்படுத்தினர். தேங்கி துர்நாற்றம் வீசுவதால், சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. குப்பைக்கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கூறுகின்றனர்.

Related Stories: