திண்டுக்கல்லில் இன்று 900 இடங்களில் தடுப்பூசி முகாம்

திண்டுக்கல், ஜன. 22: திண்டுக்கல் மாவட்டத்தில் 900 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 19 வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 900 இடங்களில் நடைபெறவுள்ளது. ஒமிக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால், அதிக பாதிப்பின்றி தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி, திண்டுக்கல் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: