அணைக்கட்டு வட்டார வள மையத்தில் படிக்கும் 62 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள்; வட்டார கல்வி அலுவலர்கள் வழங்கினர்

அணைக்கட்டு, ஜன. 22: அணைக்கட்டு வட்டார வள மையத்தில் படிக்கும் 62 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்களை வட்டார கல்வி அலுவலர்கள் வழங்கினர். அணைக்கட்டில் வட்டார வள மையம் இயங்கி வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய உபகரணங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைக்கட்டு வட்டார வள மையத்திற்கு வந்தடைந்தது. இதனை அந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி அணைக்கட்டு வட்டார வள மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது.  நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய மேர்பார்வையாளர் சாந்தி தலைமை தாங்கினார். அணைக்கட்டு வட்டார இயலாமை ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். அரசு பள்ளிகளை பலபடுத்துவோம் பாதுகாப்பு இயக்க வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் அன்னையா வரவேற்றார்.

இதில் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், தமிழ்செல்வி, வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டு அணைக்கட்டு வாட்டாரத்தை சேர்ந்த 62 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு காதெலி கருவி, சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல உபகரணங்களை வழங்கினர். முடிவில் ஆசிரிய பயிற்றுனர் மெய்யழகன் நன்றி கூறினார்.

Related Stories: