×

நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை 125 போலீசார் பங்கேற்பு

நாகர்கோவில், ஜன.22: நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நேற்று தொடங்கியது.நாட்டின் 73 வது குடியரசு தின விழா வருகிற 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடக்கின்றன. கலெக்டர் அரவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.  எஸ்.பி. பத்ரி நாராயணன் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.இதையொட்டி நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது.

இதில் ஆயுதப்படை போலீசார், பெண் போலீசார் உள்பட சுமார் 125 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து 24ம்தேதி வரை ஆயுதப்படை மைதானத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. 25ம்தேதி, அண்ணா ஸ்டேடியத்தில் ஒத்திகை நடைபெறும். இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மிகவும் எளிமையான முறையில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடக்கின்றன. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. குடியரசு தின விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. கடலோர பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள லாட்ஜுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : Republic Day parade ,Armed Forces Grounds ,Nagercoil ,
× RELATED நாகர்கோவில் அரசு பொறியியல்...