என்எல்சி மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகள் ஆய்வு

நெய்வேலி, ஜன. 22: நெய்வேலி என்எல்சி பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்ததை தொடர்ந்து, கொரோனா கட்டுப்பாடுகள் குறித்தும், நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் குறித்தும் நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில், மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் ரமேஷ் பாபு தலைமையில் மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு மருத்துவ அதிகாரி காரல், வட்டார மருத்துவ அலுவலர் அகிலா, மாவட்ட நோய் கட்டுப்பாடு மருத்துவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.ஆய்வில், கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகள் வலியுறுத்தப்பட்டது. முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நோயாளிகள், வீட்டில் இருப்பதை உறுதிசெய்ய தனி குழு அமைத்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நோயாளிகள் கைபேசி மூலம் ஆலோசனை பெரும் வகையில் கட்டுப்பாடு அறை செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: