×

கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

விருத்தாசலம், ஜன. 22: மங்கலம்பேட்டை அம்பேத்கர் நகரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்க இடம் வசதியின்றி வசித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா திட்டத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் அம்பேத்  தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தங்கள் பகுதியில் ஆய்வு நடத்தி இட வசதியின்றி தவித்து வரும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதில் மாவட்ட துணைச் செயலாளர் திராவிடமணி, விருத்தாசலம் நகர செயலாளர் முருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, ஒன்றிய பொருளாளர் எழில்வான், சிறப்பு துணை செயலாளர் தென்றல், அய்யாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kottayam ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வந்த பெண்...