மன்னார்குடியில் பஸ் சக்கரத்தில் சிக்கி அடையாளம் தெரியாத மூதாட்டி பலி

மன்னார்குடி, ஜன.22: மன்னார்குடியில் பஸ் சக்கரத்தில் சிக்கி அடையாளம் தெரியாத மூதாட்டி பலியானார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி-மதுக்கூர் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் இருந்து நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தஞ்சாவூர் செல்வதற்காக பஸ் ஒன்று புறப்பட்டது. வலங்கைமான் அடுத்த வடக்கு பட்டம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் (46) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். பயணிகளை ஏற்றுவதற்காக மன்னார்குடி பேருந்து நிலையம் நோக்கி வந்த போது ருக்குமணிப் பாளையம் ரவுண்டானா அருகே சுமார் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல்அறிந்து இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், எஸ்எஸ்ஐ வீரையன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார் ? அவரை எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: