×

மன்னார்குடி நகராட்சி தலைவர் பதவி பொது கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

மன்னார்குடி, ஜன.22: மன்னார்குடி நகராட்சி தலைவர் பதவி பொது பிரிவாகவும், கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மேயர் மற்றும் தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அரசாணை வெளியிட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு பொது பிரிவாகவும், கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு பெண்களுக்கான பொது இடஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மன்னார்குடி நகராட்சி 33 வார்டுகள் கொண்ட பகுதியாகும். இதில் ஆண் வாக்காளர்கள் 30, 114ம், பெண் வாக்காளர்கள் 32,870, மற்றவர்கள் 2 என மொத்தம் 62 ஆயிரத்து 988 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தலைவர் பதவி பொதுப்பிரிவு என இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 33 வார்டுகளில் இட ஒதுக்கீடு பற்றிய விவரம் வருமாறு: எஸ்சி பொது 27 வார்டு, எஸ்.சி பெண்கள் 6, 9 வார்டு, பெண்கள் பொது 1, 7, 10, 12, 16, 17, 19, 21, 22, 23, 26, 29, 31, 32, 33 வார்டு, ஆண்கள், பெண்கள் போட்டியிடும் பொது வார்டு 2, 3, 4, 5, 8,11, 13, 14, 15, 18, 20, 24, 25, 28, 30 ஆகும்.கூத்தாநல்லூர்:கூத்தாநல்லூர் நகராட்சி 24 வார்டுகள் கொண்ட பகுதியாகும். இதில் ஆண் வாக்காளர்கள் 11, 239ம், பெண் வாக்காளர்கள் 12,443, மற்றவர்கள் 4 என மொத்தம் 23 ஆயிரத்து 686 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தலைவர் பதவிக்கு பெண்கள் பொது என இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் 24 வார்டுகளில் இட ஒதுக்கீடு பற்றிய விவரம் வருமாறு: எஸ்சி பொது 14, 24 வார்டு, எஸ்.சி பெண்கள், 1, 12, 17 வார்டு, பெண் கள் பொது 10, 13, 15, 16, 18, 19, 20, 21, 22 வார்டு, ஆண்கள், பெண்கள் போட்டியிடும் பொது வார்டு 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 23 ஆகும்.

Tags : Mannargudi ,Municipal ,General ,Koothanallur ,Municipal Chairman ,
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.64,390 பறிமுதல்