சுகாதாரத்துறையினர் அதிரடி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம், ஜன.22: வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரியும் 50 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு வழங்கி வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை மீண்டும் வழங்க உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகை மாவட்ட செயலாளர் சித்ராகாந்தி, முன்னாள் மாவட்ட பொருளாளர் ராமநாதன், வட்டார செயலாளர் இளங்கோவன் மாவட்ட பொருளாளர் எழில்மாறன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்

Related Stories: