கரூர் அருகே ஏமூர் சாலையில் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள்

கரூர், ஜன.22: கரூர்-ஏமூர் சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ள உயர் அழுத்த மின் கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்துள்ளதால் மின்வாரியதுறை மின்கம்பத்தை சரி செய்து செடிகொடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே ஏமூர் மற்றும் திருச்சி பைபாஸ் சாலை செல்வதற்கான சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.மேலும், சாலையின் இருபுறமும் விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இந்நிலையில், ஏமூர் ரயில்வே கேட் அருகே விவசாய நிலத்தில் எந்த நேரத்திலும் விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. கடந்த பல மாதங்களாகவே இந்த மின்கம்பத்தின் நிலை இதுபோலத்தான் உள்ளது.இதனை சரி செய்ய வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு கீழே விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: