×

அரவக்குறிச்சியில் அனைத்து பேருந்துகளும்

அரவக்குறிச்சி, ஜன.22: அரவக்குறிச்சியில் அனைத்து பேருந்துகளும் பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்லவேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சியின் மேற்கே சின்னதாராபுரம் ரோட்டில் பஸ் நிலையம் உள்ளது. கரூர் திண்டுக்கல் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதில்லை.கடைவீதி பஸ் நிறுத்தத்திலேயே பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்கின்றன.அரவக்குறிச்சியின் மேற்கே தான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,பேரூராட்சி அலுவலகம், கல்வி அலுவலகம், காவல்நிலையம், வங்கிகள் போன்ற முக்கிய அலுவலகங்கள் உள்ளன. பேரூந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் தான் பொன்நகர், ஹபீப்நகர், ஐயாவுநகர், கேர்நகர் போன்ற பகுதிகளில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்கள் பகுதிக்கும், அப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டியவர்களும் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஒன்னரை கிமீ சிரமப்பட்டு நடக்க வேண்டியுள்ளது. அதே போல அரவக்குறிச்சியின் மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் ஒன்னரை கிமீ நடந்து தான் கரூர் திண்டுக்கல் பஸ் ஏற வேண்டும்.

இதில் முதியவர்கள், குழந்தைகள், கர்பினிகள், சூட்கேஸ் போன்ற சுமைகளுடன் செல்பவர்கள் உள்ளிட்டவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் அவல நிலையுள்ளது. இதனால் ஆட்டோவில் கிழக்கே வந்துதான் பஸ் ஏற வேண்டியுள்ளது. இதனால் பஸ் கட்டணம், ஆட்டோ கட்டணம் என பொது மக்களுக்கு இரட்டை செலவு ஏற்படகின்றது.  இதனால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் சிரமப்படுகின்றனர். இரவில் எந்த பேரூந்தும் பஸ் நிலையத்திற்கு வருவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளகின்றனர். இது தொடர்பாக பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த பயனினுமில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். தாலுகா தலைமையிடமான அரவக்குறிச்சியில் இரவு பகல் எந்த நேரத்திலும் அனைத்து பேருந்துகளும் பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்ல மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aravakurichi ,
× RELATED வாக்குப்பதிவு முடிந்து விட்டதால்...