வேகத்தடையில் பஸ் பழுதாகி நின்றதால் கரூர்- திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கரூர், ஜன.22: கரூர் திருமாநிலையூர் அருகே வேகத்தடையில் தனியார் பேருந்து திடீரென பழுதாகி நின்றதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.திருச்சி, திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் வரும் அனைத்து பேருந்துகளும், வாகனங்களும் சுங்ககேட், திருமாநிலையூர் வழியாக கரூர் பேருந்து நிலையம் சென்று வருகிறது.நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கரூர் நோக்கி வந்த தனியார் பேருந்து திருமாநிலையூர் வேகத்தடை முன்பு பிரேக் டவுனாகி நின்றது. இந்த நேரத்தில், கரூர் நோக்கி பின்னால் வந்த மற்றொரு அரசு பேரூந்தும், தனியார் பேருந்து அருகில் வந்து நின்ற போது, இரண்டு வாகனங்களும் ஒரே இடத்தில் நின்று கொண்டது. அரசு பேருந்தும் அங்கிருந்து புறப்பட முடியாமல் நின்றது. இதன் காரணமாக, பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் சுங்ககேட் வரை வரிசை கட்டி நின்றது. இதனால், அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போக்குவரத்து போலீசாருடன், பொதுமக்களும் இணைந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து இந்த சாலையில் சீரானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: