தேசிய அளவிலான ஓவிய போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை

திருவள்ளூர்: தேசிய அளவிலான ஓவிய போட்டியை நெய்பர்ஹூட் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் சென்னை மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 7ம் வகுப்பு மாணவி டோனெட்டா டி.சாஜூ கலந்துகொண்டார்.

இவர் ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான உலகம் என்ற தலைப்பில் தனது ஓவியத்திறனை நிரூபித்து இந்தியாவின் மிகப்பெரிய ஓவியப் போட்டியான ஃபீட் பை ஆர்ட்டில் இரண்டாம் பரிசைப் பெற்று வெற்றி பெற்றார். இவரது சாதனையை பள்ளியின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் முதல்வர், தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: